தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவி விலகியதன் காரணமாக, மேற்கு வங்கத்தில், நந்திகிராம் மற்றும் ரெஜிநகர், புதுச்சேரியில் தட்டாஞ்சாவாடி, தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், அசாம் மாநிலத்தின் நகோன் மக்களவைத் தொகுதிக்கும் கடந்த அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தச்சூழலில் தான், இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.
இதையடுத்து, இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளின் வெற்றி நிலவரம் குறித்துப் பார்க்கலாம். புதுச்சேரி தட்டாஞ்சாவடியில், என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் 8, 482 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாட்டில், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளையும் தவெக கைப்பற்றியிருக்கிறது.
அதேபோல, மேற்கு வங்கம் ரெஜி நகரில், பாஜக வேட்பாளர் சங்கரவ் சர்க்கார் 75,816 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மற்றொரு தொகுதியான நந்திகிராமில், பாஜக வேட்பாளர் ஹாசி ராணி ரத் 1,22,753 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அசாமில் உள்ள மக்களவைத் தொகுதியான நகோனில், பா.ஜ.க-வின் தேவாசிஷ் சர்மா மொத்தம் 6,39,487 வாக்குகள் பெற்று வெற்றி முகத்தில் உள்ளார்.