இந்தியா

மத்திய பிரதேச இடைத்தேர்தல் முடிவுகள்: பாஜக முன்னிலை

மத்திய பிரதேச இடைத்தேர்தல் முடிவுகள்: பாஜக முன்னிலை

webteam

மத்திய பிரதேச இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கையில் பாஜக 17 இடங்களிலும் காங்கிரஸ் 9 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

முன்னதாக பீகார் தவிர பிற 11 மாநிலங்களில் உள்ள 58 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெற்று வருகிறது. இதில் மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இங்கு பாஜக குறைந்தது 8 இடங்களில் வென்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது.

இங்கு ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சி இருந்த நிலையில் அக்கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து விட்டு ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் பாஜகவுக்கு மாறினர். ராஜினாமா செய்தவர்கள் இம்முறை பாஜக சார்பில் களமிறங்கியிருந்தனர்.