இந்தியா

4 மாதங்களில் 200 பயணிகளிடம் கொள்ளையடித்த கும்பல்..! அதிரடி காட்டிய போலீஸ்..!

Rasus

வாடகைக்கு கார்களில் பயணிகளை ஏற்றிச் செல்வதாக கூறி அவர்களிடம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

குர்கான்- டெல்லி நெடுங்சாலையில் கடந்த சில மாதங்களாகவே திருட்டுச் சம்பவம் தொடர்கதையாக நடைபெற்று வந்தது. இதனையடுத்து போலீசார் அந்தப் பகுதிகளில் குற்றவாளிகளை பிடிக்க அதிரடி சோதனை நடத்தினர். அதன்படி போலீசார் ஒருவர், அவ்வழியாக வந்த காரில் லிப்ட் கேட்டுள்ளார். மற்ற போலீசார் அவர்களை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இடையில் போலீசாரிடம் அந்த கும்பல் கொள்ளையடிக்க முயன்றுள்ளது. தக்க நேரத்தில் அந்த இடத்திற்கு சென்ற மற்ற போலீசார் அந்த கொள்ளை கும்பலை கைது செய்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றவர்களை கைது செய்யும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இரவு நேரத்தில் பேருந்து கிடைக்காமல் சிரமப்படும் செல்வந்தர்களிடம் குறிவைத்து இக்கும்பல் கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. வாடகைக்கு காரில் ஏற்றிச் செல்வதாக கூறி, பின்னர் காரில் வைத்து பயணிகளை மிரட்டி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அத்துடன் பயணிகளின் ஏடிஎம் கார்டு மற்றும் பின் நம்பர்களை வலுக்கட்டாயமாக பெற்றதும் தெரியவந்துள்ளது. துப்பாக்கி உள்ளிட்டவற்றை வைத்துக்கொண்டு மிரட்டி அந்த கும்பல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 4 மாதங்களில் மட்டும் இந்த கொள்ளை கும்பல் 220 பயணிகளிடம் சுமார் 38 லட்சம் மதிப்பிலான பணம் நகைகள் செல்போன்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துள்ளது. இதுதொடர்பான விசாரணையை  போலீசார் தற்போது தீவிரப்படுத்தியுள்ளனர்.