இந்தியா

65 அடுக்கில் ஷாப்பிங் மால்களுடன் பிரம்மாண்ட வர்த்தக மையம்!

webteam

அசாம் மாநிலம் கவுகாத்தில் 1,950 கோடி செலவில் இரட்டை கோபுர வர்த்தக மையம் அமைய உள்ளது.

அசாம் மாநிலத்தில் கடந்த வெள்ளிக் கிழமையன்று உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் பல தலைவர்கள் கலந்துகொண்டனர். மாநாட்டின் முடிவில் கவுகாத்தி நகரில் இரட்டை கோபுர வர்த்தக மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதுகுறித்து அசாம் மாநில முதல்வர் சர்பானந்த சோனோவால், அசாம் மாநிலத்தில் அமையவுள்ள வர்த்தக மையத்தால் புதிய ஊக்கத்தை அளிப்பதாகவும், மேலும் பொருளாதார நாடுகளை விட இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி அடைய தூண்டுகோலாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்காக அசாம் மாநில அரசு 10.6 ஏக்கர் நிலம் வழங்கி உள்ளது. ரூ.1,950 கோடி செலவில் 65 மாடிகளை கொண்டதாக கட்டப்படவுள்ளது. வர்த்தக மையத்தில் நவீன வசதிகளுடன் கூடிய சேவைகள், ஷாப்பிங் மால்கள் அடுக்குமாடி குடியிருப்பு, 4 ஆயிரம் கார்கள் நிறுத்தும் அளவிற்கான பார்க்கிங் வசதிகள் அமைக்கப்பட உள்ளன. வரும் ஜூலை மாதம் இதற்கான கட்டுமான பணிகள் துவக்கப்பட உள்ளது.