நாளை பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன் Pt web
இந்தியா

இந்தியாவின் 88-வது பட்ஜெட் நாளை தாக்கலாகிறது.. பட்ஜெட்டை தெரிந்துகொள்ள சில பொருளாதார சொற்கள்!

பட்ஜெட்டைப் புரிந்துகொள்ள சில அடிப்படையான பொருளாதார சொற்களை தெரிந்துகொள்வது அவசியம். அவை என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.

PT WEB

GDP: மொத்த உள்நாட்டு உற்பத்தி

இது நாட்டின் ‘வளர்ச்சி ரிப்போர்ட் கார்டு’. ஒரு வருடத்தில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பு. ஜிடிபி உயர்ந்தால், நாடு வளர்கிறது, புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின்றன என்று அர்த்தம்.

Inflation: பணவீக்கம்

Inflation

எளிமையாகச் சொன்னால் இது விலைவாசி உயர்வு. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு தவறினால், உங்கள் வீட்டு பட்ஜெட் பாதிக்கும். ரூபாய் மதிப்பு: சர்வதேசச் சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் பலம். இது குறைந்தால் நாம் இறக்குமதி செய்யும் பெட்ரோல், டீசல் மற்றும் தங்கம் ஆகியவற்றின் விலை உயரும்.

Fiscal Deficit: நிதிப் பற்றாக்குறை

அரசாங்கத்தின் மொத்த வருமானத்தைவிடச் செலவு அதிகமாக இருக்கும்போது ஏற்படும் இடைவெளிதான் இது. இந்தப் பற்றாக்குறை குறைவாக இருந்தால் நாட்டின் பொருளாதாரம் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். அதிகமாக இருந்தால் பற்றாக்குறையை ஈடுகட்ட அரசு கடன் பெற வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும்.

Capital Expenditure: மூலதனச் செலவு

புதிய ரயில்வே பாதைகள், பாலங்கள், மருத்துவமனைகள் அல்லது தொழிற்சாலைகள் கட்டுவதற்கு அரசு செய்யும் செலவு. இது எதிர்கால வளர்ச்சிக்கான அரசின் முதலீடு ஆகும்.

Revenue Expenditure: வருவாய் செலவினம்

வருவாய் செலவினம் என்பது அரசு இயந்திரம் அன்றாடம் இயங்குவதற்காகச் செய்யும் செலவு இது. அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், கடனுக்கான வட்டி மற்றும் மானியங்கள் இதில் அடங்கும். நிர்வாகம் சீராக நடக்க இது அவசியம்.