இந்தியா

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு 30,757 கோடி ஒதுக்கீடு: பட்ஜெட்டில் அறிவிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு 30,757 கோடி ஒதுக்கீடு: பட்ஜெட்டில் அறிவிப்பு

webteam

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு 30,757 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என பட்ஜெட் உரையின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

வங்கித் துறையை உறுதிப்படுத்த பல்வேறு உத்வேக முயற்சிகள் எடுக்கப்படும் எனக் கூறிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கூட்டுறவு வங்கிகளின் விதிகளில் பெருமளவு மாற்றம் கொண்டு வரப்படும் என்றார். மேலும் முதலீட்டாளர்களின் வைப்புத் தொகைக்கான காப்பீடு 1 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும் என தெரிவித்தார். வங்கிகளில் முதலீடு செய்துள்ளவர்களின் பணம் பத்திரமாக உள்ளது என தெரிவித்த அவர், அதேபோல் முதலீட்டாளர்களின் காப்பீடு உயர்த்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

யூனியன் பிரதேசமான லடாக் மேம்பாட்டிற்காக 5,958 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு 30,757 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மேலும் அனைத்து வகையான ரசாயன உரங்களை பயன்படுத்துவதற்கு ஊக்கமளிக்கப்படும். அதிக அளவில் இத்தகைய உரங்களை பயன்படுத்துவதற்கு தேவையான ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அவர், ஜி20 நாடுகளின் உச்சிமாநாட்டை 2022-ஆம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.