இந்தியா

இன்று ஊதியம் கிடைக்கும்: பி.எஸ்.என்.எல். நிர்வாக இயக்குனர் தகவல்

webteam

பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு இன்று ஊதியம் வழங்கப்படும் என்று அதன் நிர்வாக இயக்குனர் அறிவித்துள்ளார்.

பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல். ஊழியர்கள், 1.76 லட்சம் பேருக்கு பிப்ரவரி மாத சம்பளம் வழங்கப்படவில்லை. இது நாடு முழுவதும் பரபரப்பானது. 

இந்நிலையில் பி.எஸ்.என்.எல். தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனுபம் ஸ்ரீவஸ்தவா வெளியிட்டுள்ள அறிக்கையில், “பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு பிப்ரவரி மாத ஊதியம் இன்று வழங்கப்படும். மார்ச் மாதத்தில் ரூ.2,700 கோடி இயல்பான வருவாய் வரும் என எதிர்பார்த்தோம்.

இதில், ரூ.850 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது. மூலதன தேவைக்காக ரூ.3,500 கோடி வங்கிக்கு செலுத்த இருக்கிறோம். இதன்மூலம் இனி வரும் மாதங்களில் ஊதியம் வழங்குவதில் தாமதம் இருக்காது. இந்த பிரச்சினையில் உதவிய தொலைதொடர்பு அமைச்சர் மனோஜ் சின் ஹாவுக்கு நன்றி’’ என்று தெரிவித்துள்ளார்.