இந்தியா

சிறப்புப் பள்ளி ஆசிரியர்களை பணி வரன்முறை செய்ய லஞ்சம் ?

webteam

சிறப்புப் பள்ளி ஆசிரியர்களை பணி வரன்முறை செய்வதாகக் கூறி ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கப்பட்டதாக கொடுக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிவகாசியில் உள்ள சிறப்புப் பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஒரு பணியிடத்திற்கு 6 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், 35 லட்சத்தை மாற்றுத் திறனாளி ஆணையரக அதிகாரி ரஜினிகாந்த் என்பவரது அறிவுரைப்படி அவரது சென்னை வீட்டில் கொடுத்ததாகவும் கடந்த நவம்பர் மாதத்தில் மாற்றுத் திறனாளி நலத் துறைக்கு கடிதம் எழுதப்பட்டது. 

அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாற்றுத்திறனாளி நல ஆணையரகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், நடவடிக்கை ஏதும் இதுவரை எடுக்கப்படவில்லை என மாற்றுத் திறனாளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் மாற்றுத் திறனாளி ஆணையரக உதவி இயக்குநரான ரஜினிகாந்திடம் விளக்கம் கேட்டபோது, இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.