ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஆளுநராக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுஸ்மா சுவராஜ் நியமனம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
1970களிலே சுஸ்மா சுவராஜ் அரசியலில் நுழைந்துவிட்டார். வாஜ்பாய் ஆட்சியில் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சராகவும், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சராகவும் இருந்தார். அதேபோல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கடந்த ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தார். 1998 ஆம் ஆண்டு அக்டோபர் 13 முதல் அதே ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி வரை டெல்லி முதல்வராக இருந்தார். 2019 ஆம் ஆண்டு தேர்தலில் சுஸ்மா சுவராஜ் போட்டியிடவில்லை. 2009 முதல் 2014 வரை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.
இந்நிலையில், தற்போது ஆந்திர ஆளுநராக உள்ள நரசிம்மனுக்கு பதிலாக சுஸ்மா சுவராஸ் ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.