இந்தியா

ஏவுகணை தகவல்களை கசியவிட்ட பொறியாளர் கைது

ஏவுகணை தகவல்களை கசியவிட்ட பொறியாளர் கைது

Rasus

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பிரம்மோஸ் மையத்தின் பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், ரஷ்யாவின் என்.டி.ஓ.எம் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ், பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் உற்பத்தி மையங்களில் ஒன்று, மகாராஷ்டிரா மாநிலம் நாகபுரியில் செயல்பட்டு வருகிறது.

இந்த மையத்தில் தொழில்நுட்ப ஆய்வு பிரிவில் பொறியாளராக பணியாற்றி வரும் நிஷாந்த அகர்வால் என்பவர், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்புக்கும், இதர நாடுகளுக்கும் ஏவுகணை தொடர்பான ரகசிய தகவல்களை கசியவிட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். பிரம்மோஸ் ஏவுகணை மையத்தின் பொறியாளரான நிஷாந்த் அகர்வால் தலைமையின்கீழ் 40பேர் பணியாற்றி வந்துள்ளனர். இவர், 2017-18ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் இளம் விஞ்ஞானி பட்டத்தை பெற்றுள்ளார்.