இந்தியா

"விளையாடுவதற்கு பிஎஸ்4 வாங்கிக் கொடுங்கள்"- சோனு சூட்டிடம் கேட்ட சிறுவன் !

"விளையாடுவதற்கு பிஎஸ்4 வாங்கிக் கொடுங்கள்"- சோனு சூட்டிடம் கேட்ட சிறுவன் !

jagadeesh

பொது முடக்க காலத்தில் விளையாடுவதற்கு "பிஎஸ்4" வீடியோ கேம் வாங்கிக் கொடுக்குமாறு நடிகர் சோனு சூட்டிடம் சிறுவன் ஒருவன் கேட்டதற்கு அவர் பதிலளித்துள்ளார்.

இந்தியாவில் அறிவிக்கப்பட்ட பொது முடக்க காலத்திலிருந்து பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவித்த புலம்பெயர் தொழிலாளர்களை நடிகர் சோனு சூட் தனது சொந்தச் செலவில் அழைத்து வந்தார். இது மட்டுமல்லாமல் பல்வேறு நபர்களுக்கு தொடர்ந்து தனது உதவிக்கரத்தை நீட்டி வருகிறார் நடிகர் சோனு சூட்.

இந்நிலையில், தற்போது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் என தனது ட்விட்டர் மூலம் சோனு சூட்டை டேக் செய்து " இந்த பொது முடக்க காலத்தில் நண்பர்களுடன் சேர்ந்து விளையாட எனக்கு பிஎஸ் 4 வீடியோ கேம் வேண்டும். சோனு சூட் ப்ளீஸ் வாங்கித் தாங்க என பதிவிட்டுள்ளார்". இதற்கு பதிலளித்த சோனு சூட் "பிஎஸ் 4 இல்லாததால் நீ ஆசீர்வதிக்கப்பட்டவன். நான் அதற்கு பதிலாக உனக்கு நல்ல புத்தகங்களை படிப்பதற்கு அனுப்பி வைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.