இந்தியா

பயணிகள் ரயலில் வெடிகுண்டு தாக்குதல் ! தீவிரவாதிகள் கைவரிசையா ?

பயணிகள் ரயலில் வெடிகுண்டு தாக்குதல் ! தீவிரவாதிகள் கைவரிசையா ?

webteam

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே கலிந்தி பயணிகள் ரயிலில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பெயரிடப்பட்ட கடிதம் ஒன்று ரயில் பெட்டிக்குள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கான்பூரில் இருந்து பிவானி நோக்கி கலிந்தி விரைவு ரயில் வழக்கமாக புறப்பட்டுள்ளது. கான்பூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பராஜ்பூர் ரயில்நிலையத்தில் ரயில் நின்றபோது, ரயிலின் பொதுப்பிரிவு பெட்டியின் கழிவறையில் திடீரென குண்டு வெடித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள், அலறியடித்து ஓடினர். தகவலறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் மீட்புப் படையினர், துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தினர். 

மேலும் ரயிலின் அனைத்து பெட்டிகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது இந்தியில் எழுதப்பட்டிருந்த கடிதம் ஒன்று சிக்கியது. அதில் புல்வாமா தாக்குதலை அரங்கேற்றிய ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் இத்தாக்குதல் அரங்கேற்றப்பட்டதா? என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.  நேற்று இரவு 7 மணியளவில் நடந்த இத்தாக்குதலால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.