இந்தியா

அர்னாப் கைதால் ஜனநாயகத்தை வெட்கப்பட வைத்துவிட்டீர்கள்: அமித்ஷா கண்டனம்

அர்னாப் கைதால் ஜனநாயகத்தை வெட்கப்பட வைத்துவிட்டீர்கள்: அமித்ஷா கண்டனம்

webteam

ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் உள்துறைதுறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அலிபாக் பகுதியைச் சேர்ந்த உள் கட்டட வடிவமைப்பாளர் அன்வய் நாயக் தனது தாயார் குமுத் நாயக்குடன் தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் ஃபெரோஸ் ஷேக் மற்றும் நிதீஷ் சர்தா ஆகியோர் தனக்குத் தரவேண்டிய 5.40 கோடி ரூபாயை தராததே காரணம் என அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இது தொடர்பாக அர்னாப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் டி ஆர்.பி ரேட்டிங் தொடர்பான வழக்குகளை முன்வைத்து மும்பை காவல்துறை அவரை இன்று காலை கைது செய்தது. கைதின் போது அவர் காவல்துறையால் தாக்கப்பட்டதாக கூறப்பட்டது.

அர்னாப் கைதிற்கு ஸ்மிரிதி ராணி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், தற்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தனது கண்டனத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுளார். அதில் “ காங்கிரசும் அவரது நட்பு கட்சிகளும் மீண்டும் ஒரு முறை ஜனநாயகத்தை வெட்கப்பட வைத்துள்ளது. மாநில அரசு அதன் அதிகாரத்தை ரிபப்ளிக் தொலைக்காட்சி மற்றும் அர்னாப் ஆகியோருக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தனிமனித சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் நான்காவது தூணின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல். இது அவசர நிலையை நமக்கு நினைவூட்டுகிறது. பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதான இந்தத் தாக்குதலுக்கு எதிராக நாம் எதிராக நிற்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.