மத்தியில் ஆட்சிக்கு வந்த பத்தாண்டுகளில் பாஜகவின் வருமானம் நான்கு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்ட தரவுகள் கூறுகின்றன. தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி 2014-15ஆம் நிதியாண்டில் பாஜகவின் வருமானம் சுமார் 970 கோடி ரூபாயாகவும், செலவு 913 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.
மத்தியில் ஆட்சிக்கு வந்த பத்தாண்டுகளில் பாஜகவின் வருமானம் நான்கு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்ட தரவுகள் கூறுகின்றன. இதுகுறித்த விரிவான செய்தியைப் பார்க்கலாம். கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், அக்கட்சியின் வருமானம் மற்றும் செலவினங்கள் நான்கு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து வியத்தகு வளர்ச்சியைப் பெற்றுள்ளன. தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி 2014-15ஆம் நிதியாண்டில் பாஜகவின் வருமானம் சுமார் 970 கோடி ரூபாயாகவும், செலவு 913 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. ஆட்சிக்கு வந்ததற்கு பிந்தைய ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் பாஜகவின் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது. 2015-16ஆம் நிதியாண்டில் மட்டும் 570 கோடியாகக் குறைந்துள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்கான தேர்தல் பத்திரங்கள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 2016-17ஆம் ஆண்டில் பாஜகவின் வருமானம் முதல்முறையாக ஆயிரம் கோடியைக் கடந்தது. அந்த ஆண்டு அக்கட்சி 1034 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது. 2018-19இல் அது இரட்டிப்பாகி 2,410 கோடி ரூபாய் ஆனது. 2020-21ஆம் ஆண்டில் மட்டும் 752 கோடி ரூபாயாகச் சரிந்த அக்கட்சியின் வருமானம் 2021-22இல் மீண்டும் 1,917 கோடி ரூபாயாக அதிகரித்தது. 2023-24 ஆம் நிதி ஆண்டில் இது 4,340 கோடி ரூபாயாக உயர்ந்தது. 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால் அந்த ஆண்டில் வருமானமாக ஈட்டப்பட்ட முழுத்தொகையையும் செலவழித்து விட்டதாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பின்தொடர்ந்து முன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பாஜக, 2024-25இல் மட்டும் நன்கொடைகள் மூலம் 6,088 கோடி ரூபாய் ஈட்டியது. 2024ஆம்ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. இருப்பினும், பாஜகவின் தொடர்ந்து நன்கொடைகள் அளிக்கப்பட்டு வருவதால் பாஜகவின் நிதி பலம் தொடர்ந்துஅதிகரித்து வருகிறது.