இந்தியா

ஒவைசி சவாலை ஏற்க தயார்; 2022 தேர்தலிலும் உ.பியில் பாஜகவே ஆட்சி அமைக்கும் - யோகி ஆதித்யநாத்

ஒவைசி சவாலை ஏற்க தயார்; 2022 தேர்தலிலும் உ.பியில் பாஜகவே ஆட்சி அமைக்கும் - யோகி ஆதித்யநாத்

JustinDurai
'உத்தரப் பிரதேசம் சட்டப்பேரவைத் தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் பாஜக கைப்பற்றும்' என யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 75 இடங்களில், 67 இடங்களில் பாஜக வென்றது. இந்த வெற்றிக்குப் பின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''பிரதமர் மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரின் வழிகாட்டலில் இந்த வெற்றி கிடைத்துள்ளது. இந்த மகத்தான வெற்றியை அளித்த மக்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். கொரோனா பாதிப்புக்கு மத்தியில் இந்த தேர்தல் நடத்தப்பட்டு, வெற்றி கிடைத்துள்ளது.
அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 300 இடங்களுக்கும் அதிகமாகக் கைப்பற்றும். உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அசாசுதீன் ஒவைசியின் கட்சி போட்டியிடுவதாக இருந்தால், சவால் விட்டால் அதை ஏற்க பாஜக தயார். 2022-ஆம் ஆண்டிலும் பாஜகதான் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என்பதில் சந்தேகமில்லை” என்றார்.
முன்னதாக சமீபத்தில் பேசியிருந்த ஓவைசி, “உத்தரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் திரும்பவும் வரவிடமாட்டோம். கடினமாக உழைத்தால் எதுவும் முடியாதது இல்லை. உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது என்பதை உறுதி செய்வோம்” என்று கூறியிருந்தார்.