ஜனவரி 20ஆம் தேதி புதிய தேசிய தலைவர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என பாஜக கட்சி தெரிவித்துள்ளது.
பாஜக தேசிய தலைவராக கடந்த 2020 பிப்ரவரியில் பொறுப்பேற்றார் ஜே.பி. நட்டா. இவரது பதவிக்காலம் ஏற்கெனவே முடிந்த நிலையில், கடந்த மக்களவை தேர்தலுக்காக நட்டாவின் பதவிக்கலாம் நீட்டிப்பு செய்யப்பட்டது. இதனால் பாஜக புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், கட்சியின் புதிய தலைவர் நியமனம் குறித்து சில மாதங்களாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து, நீண்ட மாதங்களாக நடைபெற்றுவந்த ஆலோசனையின் முடிவில், தேசிய செயல் தலைவராக பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த நிதின் நபின் சின்ஹா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்தியில் நியமனம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் வருகிற 20ஆம் தேதி புதிய தேசிய தலைவர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என பாஜக கட்சி தெரிவித்துள்ளது. தற்போது, நிதின் நபின் சின்ஹாவே செயல் தலைவராக இருப்பதால் அவரே இந்த தேசிய தலைவராக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் ஆதரவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, ஜே.பி. நட்டா 2019ஆம் ஆண்டு செயல் தலைவராக நியமிக்கப்பட்டு, பின்னர் தேசிய தலைவராக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.