bjp releases the first list of candidates file image
இந்தியா

சத்தீஸ்கர், ம.பி: தேர்தல் அறிவிப்புக்கு முன்பே முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. அதிரடி காட்டும் பாஜக!

சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது.

PT WEB

சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது. சத்தீஸ்கரில் முதல்கட்டமாக 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும், மத்தியப் பிரதேசத்தில் 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் பாஜக அறிவித்துள்ளது.

இரு மாநிலங்களிலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிய உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முதல்கட்ட பட்டியலுக்கு ஒப்புதல் பெறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.