இந்தியா

இமாசலப் பிரதேச தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

இமாசலப் பிரதேச தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

webteam

இமாசலப் பிரதேச தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இமாசலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 68 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமால் சுஜன்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இமாசலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த திங்கள் கிழமை தொடங்கியது. வரும் 23ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். நவம்பர் 9ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 68 தொகுதிகளில் பதிவான வாக்குகள் டிசம்பர் 18ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.