இந்தியா

பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கொரோனா உறுதி

பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கொரோனா உறுதி

newspt

பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியிருந்தது. இந்நிலையில், பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘சில கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால், பரிசோதனை மேற்கொண்டேன். இந்த சோதனையின் முடிவில் எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது நான் நலமாக உள்ளேன். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, நான் என்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். கடந்த சில நாட்களில், என்னை நேரில் சந்தித்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.