இந்தியா

பாஜக‌ குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார்?

பாஜக‌ குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார்?

webteam

பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் இன்று அல்லது நாளைக்குள் முடிவு செய்யப்பட உள்ளது.

பிரதமர் மோடி போர்ச்சுகல், அமெரி‌க்கா, நெதர்லாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கு வரும் 24 ஆம் தேதி தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். எனவே இன்றும் நாளையும் நடைபெறும் பாஜகவின் ஆட்சிமன்றக் கூட்டத்தில் வேட்பாளர் முடிவு செய்யப்பட்டு நாளை மறுநாளுக்குள் பெயர் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வரும் 23 ஆம் தேதியன்று அவர் வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக, குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க பாஜக தரப்பில் மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, வெங்கய்ய நாயுடு ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், எதிர்க்கட்சிகள் தரப்பில் பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் ‌உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளனர்.