இந்தியா

"புலியை சுட்டுக் கொல்லும் உத்தரவை பாஜக விரும்பவில்லை" - வானதி சீனிவாசன்

jagadeesh

நீலகிரி மாவட்டத்தில் சுற்றித்திரியும் ஆட்கொல்லிப் புலியை சுட்டுக்கொல்லும் உத்தரவை பாஜக விரும்பவில்லை என்று சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பிஜேபி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட்ட வானதி சீனிவாசன் காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்த பின் செய்தியாளரிடம் பேசினார். அப்போது, "பெட்ரோல், டீசல் விஷயத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. தேர்தலுக்கு முன்பு ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டு வருவதாக கூறி இருந்தார்கள். ஆனால் தற்போது எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்" என்றார்.

மேலும் "புலி என்பது ஒற்றை உயிர் அல்ல. வனத்துக்குள் புலியை சுட்டுக் கொல்வதற்கு பாரதிய ஜனதா கட்சி விரும்பவில்லை. புலியை மீண்டும் வனத்துக்குள் அப்பகுதி மக்கள் உதவியோடு பத்திரமாக அனுப்பி வைக்க வேண்டும்" என்றார் வானதி சீனிவாசன்.