பொங்கல் கொண்டாடும் தமிழக மக்களுக்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கு எனது மகிழ்ச்சியான பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். இந்த வருட பொங்கல் திருவிழா அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தை தர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, தமிழில் பொங்கல் வாழ்த்துக்கள் கூறியுள்ள நிலையில், அமித்ஷாவும் தமிழில் வாழ்த்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.