இந்தியா

சரத்பவாரை சந்தித்த பாஜக எம்.பி. சஞ்சய் காகடே!

சரத்பவாரை சந்தித்த பாஜக எம்.பி. சஞ்சய் காகடே!

webteam

மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அவரது வீட்டில் பாஜக எம்.பி. சஞ்சய் காகடே சந்தித்தார்

மகாராஷ்ட்ராவில் ஒரே இரவில் அதிரடியான அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்ததை தொடர்ந்து, அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தலைமையில், மும்பையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 50 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அப்போது பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க உதவிய அஜித் பவாரை கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்தத் தகவலை தேசியவாத காங்கிரஸ் வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

இந்நிலையில் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அவரது வீட்டில் பாஜக எம்.பி. சஞ்சய் காகடே சந்தித்தார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சரத்பவாருடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட சஞ்சர் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

இதற்கிடையே மகாராஷ்ட்ராவில் பாஜகவை ஆட்சியமைக்க அனுமதித்ததில் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி ஒருதலைபட்சமாக முடிவெடுத்திருப்பதாக கூறி, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று காலை 11.30 மணிக்கு விசாரிக்கவுள்ளது.