டெல்லியில் கடந்த மாதம் நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தைத் தொடங்கினர். இந்தப் போராட்டத்தில் காவல்துறை தடியடி நடத்திய நிலையில், ஒருகட்டத்தில் இது பெரும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டமாக உருவெடுத்தது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் மாணவர்கள் நீட் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்தர் பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர். முதலில் டெல்லியில் தொடங்கிய இந்தப் போராட்டம் பின்னர் நாடு முழுவதும் விரிவடைந்தது.
இதன் காரணமாக மாணவர்கள் போராட்டத்துக்கு பாஜக அரசு பணிந்து, மத்திய அமைச்சர் பதவியிலிருந்து தர்மேந்தர பிரதான் ராஜினாமா செய்தார். இதனிடையே மாணவர்களின் இந்தப் போராட்டம் பற்றி பாஜக எம்.பியும், நடிகையுமான கங்கனா ரணாவத் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
அவர் வெளியிட்ட வீடியோவில், நான் என் வாழ்நாளில் இப்படி ஒரு அசிங்கத்தைப் பார்த்ததே இல்லை என்றும், இந்த தலைமுறையினரின் போராட்ட ரீல்களையும், அதில் அவர் பயன்படுத்திய வார்த்தைகளையும் பார்த்தால் வாந்தி வரும் அளவுக்கு இருக்கிறது என்றும் கூறியிருந்தார். அதேபோல தங்களை மேற்கத்திய பாணியில் சித்தரிக்கும் இந்தப் புதிய தலைமுறை பெண்களை ’சாக்கடை தலைமுறை’ என்றே அழைப்பேன் என்றும் கூறியிருந்தார்.
அவரின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், கங்கனா ரணாவத் மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் அவமரியாதை செய்ததாக வழக்கறிஞர் ரமா சங்கர் சர்மா என்பவர் ஆக்ரா நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில் கங்கனா ரணாவத் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட ஆக்ரா நீதிமன்றம், இந்த வழக்கு வரும் 22-ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது. இதனால் கங்கனா ரணாவத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது.
அவரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், கங்கனா ரணாவத் மாணவர்களையும், அவர்கள் பெற்றோர்களையும் அவமரியாதை செய்ததாக வழக்கறிஞர் ரமா சங்கர் சர்மா என்பவர் ஆக்ரா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அதில் கங்கனா ரணாவத் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது ஆக்ரா நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் இந்த வழக்கு வரும் 22-ம் தேதி விசாரணைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கங்கனா ரணாவத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது.