இந்தியா

குஜராத்: சொகுசு விடுதியில் சூதாட்டம், மது விருந்து; பாஜக எம்.எல்.ஏ கைது

JustinDurai

குஜராத்தில் சொகுசு விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாஜக எம்.எல்.ஏ. உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

பஞ்ச்மஹால் காவல் எல்லைக்கு உட்பட்ட விடுதி ஒன்றில் சூதாட்டம் மற்றும் மது விருந்து நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் அங்கு சோதனை நடத்தினர். இதையடுத்து அங்கிருந்த இளம் பெண்கள் மற்றும் பாஜக எம்.எல்.ஏ. கேசரிசின் சோலங்கி உள்பட 25 பேரை கைது செய்து அழைத்து சென்றனர். அவர்களிடம் இருந்து சுமார் ஆறு லட்சம் ரூபாய் பணம், 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.