இந்தியா

“மெஜாரிட்டிக்கு கூட்டணி கட்சிகள் தேவைப்படலாம்” - ராம் மாதவ்

rajakannan

ஆட்சி அமைப்பதற்கான மெஜாரிட்டை பெற கூட்டணி கட்சிகளின் உதவி தேவைப்படலாம் என பாஜக தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய ராம் மாதவ், “கடந்த முறை மெஜாரிட்டி தேவையான இடங்களை காட்டிலும் அதிகமாகவே நாங்கள் பிடித்திருந்தோம். இந்த முறை ஆட்சி எதிர்ப்பு மனநிலை காரணமாக அதேபோல், மெஜாரிட்டிக்கான தொகுதிகளை பெற முடியாமல் போகலாம்.

ஆட்சி அமைக்க தேவையான 271 இடங்களை பாஜக மட்டுமே பிடித்துவிட்டால் மகிழ்ச்சிதான். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் பெறும் இடங்களை சேர்த்தால் கூடுதல் பலம் கிடைக்கும். வடகிழக்கு மாநிலங்கள், மேற்குவங்காளம், ஒடிசா மாநிலங்களில் கிடைக்கும் கூடுதலாக இடங்கள், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் இழக்கும் இடங்களை ஈடு செய்யும். 

இந்தியாவில் கிழக்கு பகுதியில் கட்சியை வலுவாக ஊன்றிவிட்டோம். அதேபோல், தென்னிந்தியாவிலும் வலிமையடைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்” என்று பேசினார். 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக 282 இடங்களை பிடித்து மிகப்பெரிய கட்சியாக உருவானது. ஆனால், காங்கிரஸ் கட்சி வெறும் 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.