இந்தியா

தபால் வாக்குகள்: 160 இடங்களில் பாஜக முன்னிலை

தபால் வாக்குகள்: 160 இடங்களில் பாஜக முன்னிலை

webteam

தபால் வாக்குகளில் பாஜக கூட்டணி, 160 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில்  வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில்‌ 67.11 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள் ளன.

இதற்கான வாக்கு எண்ணிக்கை காலை எட்டு மணிக்கு தொடங்கின. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.இதில் பாஜக கூட்டணி 160 இடங்களுக்கு மேல் முன்னணியில் உள்ளது. காங்கிரஸ் 65 இடங்களில் மற்றவை 32 இடங்களிலும் முன்னலையில் உள்ளன.