இந்தியா

லாலு பிரசாத் மீது பீகார் பாஜக மூத்த தலைவர் புகார்

லாலு பிரசாத் மீது பீகார் பாஜக மூத்த தலைவர் புகார்

webteam

பீகார் மாநில பாஜக மூத்த தலைவர் சுசீல்குமார், லாலு பிரசாத் வீட்டுமனை விதிமீறல் செய்ததாக  முதல்வர் நிதிஷ்குமாருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

பீகார் மாநில பாஜக மூத்த தலைவர் சுசீல்குமார், மாநில முதல்வர் நிதிஷ்குமாருக்கு எழுதிய கடிதத்தில், அரசு சார்பில் கூட்டுறவு சங்கம் மூலம் எம்எல்ஏ, எம்எல்சி ஆகியோருக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுமனை வழங்கப்பட்டது. இதில் ஒரு மனை எம்எல்ஏ என்ற முறையில் லாலு பிரசாத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. 

ஆனால் அதன் பக்கத்தில் எம்எல்சி ஒருவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனையை லாலு பிரசாத் வாங்கி கொண்டார். இந்த 2 மனைகளிலும் லாலு பிரசாத் விதிமுறைகளை மீறி இருக்கிறார். கூட்டுறவு சங்க சட்டப்படி ஒரு எம்எல்ஏவுக்கு ஒரு வீட்டுமனை தான் ஒதுக்கப்பட வேண்டும். தற்போது லாலு பிரசாத் பெயரில் 2 வீட்டுமனை இருப்பது தவறானது. மேலும் எம்எல்ஏவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை வீடு கட்ட மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். வர்த்தக நோக்கத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்ற விதியும் உள்ளன. ஆனால் அந்த விதியையும் லாலு பிரசாத் மீறி விட்டார். கடந்த 15 ஆண்டுகளாக ஒரு இடத்தை வர்த்தக நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார். இதுபோல பல்வேறு வழிகளில் லாலு பிரசாத் விதிமுறைகளை மீறியுள்ளார். எனவே அவருக்கு வழங்கப்பட்ட 2 வீட்டு மனைகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று கடித்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.