இந்தியா

நடிகை சோனாலி போகத் திடீர் மரணம் - வைரலான கடைசி வீடியோ!

JustinDurai

ஹரியானாவை சேர்ந்த பாஜக தலைவரும், இந்தி நடிகையுமான சோனாலி போகத் மாரடைப்பால் காலமானார்.  அவருக்கு வயது 43.

டிக் டாக் மூலம் பிரபலமான சோனாலி போகத், கடந்த 2019இல் பாஜகவில் இணைந்தார். 'பிக் பாஸ் 14' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தார்கள். 2020 ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் அதம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் சோனாலி .

இந்நிலையில் கோவா சென்றிருந்த சோனாலிக்கு நேற்று இரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரை அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சோனாலி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  சோனாலியின் திடீர் மரணம் பாஜகவினர் மத்தியிலும் அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக சோனாலி போகத் தனது புகைப்படத்தையும், வீடியோவையும் சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார்.

2016இல்  தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் நடிகையாக அறிமுகமான சோனாலி போகத், 2019 இல் 'தி ஸ்டோரி ஆஃப் பத்மாஷ்கர்' என்ற வெப்சீரிஸ் தொடரின் ஒரு பகுதியாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.