இந்தியா

இமாச்சலத்தை இழந்த காங்கிரஸ்: பாஜக வெற்றி

webteam

பாரதிய ஜனதா கட்சி இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் உள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 42 மையங்களில் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை
தொடங்கியதில் இருந்து பாரதிய ஜனதா முன்னிலை வகித்து வந்தது. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 44 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 1 தொகுதியில் வெற்றி பெற்றது. 2 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள்
வெற்றி பெற்றனர். சுஜன்பூர் தொகுதி வாக்குகள் இன்னும் எண்ணப்பட்டு வருகின்றன. எப்படியாயினும், பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு தேர்தலில் ஆட்சியை இழந்த பாரதிய ஜனதா தற்போது மீண்டும் கைப்பற்றியுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் முதல்வராக இருந்த வீரபத்திரசிங் மற்றும் அவரது மகன் விக்ரமாதித்யா ஆகியோர் வெற்றி பெற்றனர்.