ராகுல் காந்தி  முகநூல்
இந்தியா

”அம்பேத்கருக்கான போராட்டம் அவருக்கு கௌரவமே” - 6 பிரிவுகளின் கீழ் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு!

வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்தியது, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது, மிரட்டியது என்பன உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் ராகுல் காந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

PT WEB

நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு தொடர்பாக பாஜகவினர் அளித்த புகாரின் பேரில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்தியது, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது, மிரட்டியது என்பன உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் ராகுல் காந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக எம்பிக்கள் அனுராக் தாகூர், பன்சூரி ஸ்வராஜ், ஹேமங் ஜோஷி ஆகியோர், நாடாளுமன்ற காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிரான போராட்டத்தை திசைத்திருப்பவே ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது.

அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், ”அம்பேத்கருக்காக போராடியதற்கு ராகுல் காந்தி மீது பதியப்பட்டுள்ள வழக்கை, கெளரவமாக கருதுவார். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக, ராகுல் காந்தி மீது பாஜக அரசு 26 வழக்குகளை இதுவரை பதிவு செய்துள்ளது. சாதிவெறிபிடித்த ஆர்.எஸ்.எஸ் - பாஜக ஆட்சிக்கு எதிராக போராடிவரும் ராகுல் காந்தியை எவற்றாலும் தடுத்து நிறுத்த முடியாது. அதோடு, பாஜகவினர் கொடுத்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுத்துள்ள டெல்லி காவல் துறையினர், பாஜக தலைவர்களுக்கு எதிராக காங்கிரஸ் எம்பிக்கள் அளித்த புகாரின்மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?” கே.சி.வேணுகோபால் கேள்வி எழுப்பி உள்ளார்.