இந்தியா

மேற்கு வங்கத்தில் பாஜக எம்.பி தாக்கப்பட்டதைக் கண்டித்து பந்த்

மேற்கு வங்கத்தில் பாஜக எம்.பி தாக்கப்பட்டதைக் கண்டித்து பந்த்

webteam

மேற்கு வங்கத்தில் பாஜக எம்.பி தாக்கப்பட்டதைக் கண்டித்து இன்று பந்த்-துக்கு அம்மாநில பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பாஜக- திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே சமீப காலமாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் 24 பர்கானாஸ் மாவட்டத்தின் சியாம்நகரில் உள்ள பாஜக அலுவலகத்துக்குள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் நேற்று நுழைந்து தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையறிந்து பாரக்பூர் தொகுதி பாஜக எம்.பி. அர்ஜூன் சிங் அங்கு வந்தார். இதையடுத்து அங்கு கடும் மோதல் ஏற்பட்டது.

அவரது காரை அடித்து நொறுக்கிய திரிணாமுல் தொண்டர்கள், அர்ஜூன் சிங்கையும் தாக்கினர். இதில் அவர் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  போலீசார் முன்னிலையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பாஜகவினர் புகார் கூறினர். 

இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து, அம்மாநில பாஜக, 24 பர்கனாஸ் மாவட்டத்தில் இன்று ஒரு நாள் பந்த்-துக்கு அழைப்பு விடுத்துள்ளது.