அண்ணாமலை எக்ஸ் தளம்
இந்தியா

Twist!! ஆந்திராவிலிருந்து தேர்வு செய்யப்படாத அண்ணாமலை.. பரிந்துரைத்த பாஜக வேட்பாளர் யார்?

,ஆந்திராவில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை பதவிக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் பகா வெங்கட சத்யநாராயணா போட்டியிடுவார் என பாஜக தலைமை இன்று அறிவித்துள்ளது.

Prakash J

தமிழ்நாட்டில் பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் தலைவர் அண்ணாமலையின் பதவி குறித்துப் பேசப்பட்டது. அதற்குப் பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ”அண்ணாமலையின் பங்களிப்பு முக்கியமானது, கட்சியின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலையின் திறன்களை பாஜக பயன்படுத்தும்” எனத் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, அண்ணாமலைக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவியும். வழங்கப்பட்டது. இதற்கிடையே, ஆந்திர மாநிலத்தில் இருந்து அண்ணாமலை, மாநிலங்களவை உறுப்பினருக்கு தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகின.

பாஜக

இந்த நிலையில், ஆந்திராவில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை பதவிக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் பகா வெங்கட சத்யநாராயணா போட்டியிடுவார் என பாஜக தலைமை இன்று அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் விஜய்சாய் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். இன்னும் 3 ஆண்டுகளுக்கு மேல் பதவிக்காலம் இருக்கும் நிலையில், சொந்த காரணங்களுக்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் விலகுவதாக தெரிவித்திருந்தார்.