இந்தியா

நிதி ஆயோக் கூட்டத்தில் ஆப்சென்ட்.. பாஜக கூட்டணியிலிருந்து விலகுகிறாரா நிதிஷ் குமார்?

webteam

இன்று (ஆக.8) ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவது, பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.

பீகாரில் தனது கட்சியை சேர்ந்தவர்களை வைத்து திட்டமிடப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டத்துக்கு நிதிஷ் குமார் அழைப்பு விடுத்துள்ளார். முன்னதாக நிதிஷ் குமார் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பல ஆலோசனை கூட்டங்களில் நிதிஷ் பங்கேற்காததது அவரது அதிருப்தியை காட்டுவதாக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதன்படி பாரதிய ஜனதா கட்சியுடன் கருத்து வேற்றுமைகள் அதிகரித்து வருவதால் நிதிஷ் கூட்டணியிலிருந்து வெளியேறுவார் என பீகார் அரசியல் தலைவர்கள் விவாதித்து வருகின்றனர். அப்படி அவர் வெளியேறினால், காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் நிதீஷுடன் கூட்டணி அமைக்கக்கூடும் என்றும், அதற்கே அக்கட்சியினரும் முனைப்பு காட்டிவருகின்றனர் என்றும் சொல்லப்படுகிறது. அப்படி நடந்தால் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகளுடன் புதிய கூட்டணி அமையக்கூடும். ஆனால் இதுவரை பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி உடைவதாக எந்த அதிகாரபூர்வ தகவலும் வரவில்லை.