இந்தியா

மீண்டும் ஏர் ஏசியா விமானத்துக்கு சோதனை: உயிர் தப்பிய 174 பயணிகள்

மீண்டும் ஏர் ஏசியா விமானத்துக்கு சோதனை: உயிர் தப்பிய 174 பயணிகள்

webteam

ராஞ்சியிலிருந்து புறப்பட்ட ஏர் ஏசியா விமானத்தின் மீது பறவை மோதியதால் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள முன்டா விமான நிலையத்திலிருந்து 174 பயணிகளுடன் ஏர் ஏசியா விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பறவை ஒன்று விமானத்தின் என்ஜின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், டர்பைனின் பிளேடுகள் சேதமடைந்ததுடன், புகை வந்துள்ளது. இதையடுத்து, அந்த விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் 174 பேரும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தனர். இந்த சம்பவத்தால் பயணிகள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏர் ஏசியா விமானம் தரையிறங்கும்போது பயணி ஒருவர் திடீரென அவசரமாக கதவை திறக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.