தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. டெலிகாம் முதல் எண்ணெய் சுத்திகரிப்பு வரை பலதுறைகளில் கொடிக்கட்டி பறக்கும் இவர் ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். சீனத் தொழிலதிபர் ஜாக் மாவை பின்னுக்குத் தள்ளி இந்த அந்தஸ்தை முகேஷ் அம்பானி பெற்றுள்ளார். தற்போதைய நிலவரப்படி முகேஷ் அம்பானியின் சொத்துகள் மதிப்பு 3 லட்சத்து ஆயிரத்து 240 கோடி ரூபாயாக உள்ளது. அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தை நடத்தி வரும் ஜாக் மா 2 லட்சத்து 99 ஆயிரத்து 200 கோடி சொத்துகளுடன் 2வது இடத்தில் பின் தங்கியுள்ளார்.
இதற்கிடையில் முகேஷ் அம்பானி நடத்தி வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு முதன்முறையாக 10 ஆயிரம் கோடி டாலர்களை தொட்டுள்ளது. தற்போதைய நிலையில் இந்தியாவி்ல் சந்தை மதிப்பு மிகுந்த நிறுவனங்கள் பட்டியலில் டிசிஎஸ்சுக்கு அடுத்த இடத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிடித்துள்ளது.