இந்தியா

இந்தியாவின் அறிவியல் புதுமை - பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் புகழாரம்

இந்தியாவின் அறிவியல் புதுமை - பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் புகழாரம்

JustinDurai

இந்தியாவில் அறிவியல் புதுமைக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குவது பெருமையளிக்கிறது என புகழ்ந்துள்ளார் பில்கேட்ஸ்.

டெல்லியில் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய இயற்பியல் ஆய்வகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடி காணொலி வாயிலாகக் கலந்து கொண்டு பேசினார். அந்நிகழ்ச்சியில் அறிவியல் ஆராய்ச்சியின் முக்கியத்துவம், கொரோனா தடுப்பூசி திட்டம், அறிவுசார் காப்புரிமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் உரையாற்றினார்.

இந்நிலையில் உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில்கேட்ஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை பகிர்ந்து, ‘இந்தியாவில் அறிவியல் புதுமைக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குவது பெருமையளிக்கிறது’ என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘’கொரோனா பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டுவர உலகமே உழைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் தடுப்பூசி உற்பத்தித் திறனிலும் இந்தியாவின் தலைமையைக் காண்பதற்கு சிறப்பாக இருக்கிறது" என்றும் பில்கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.