பைக் டாக்ஸிக்கு தடை web
இந்தியா

கர்நாடகா| Ola, Uber, Rapido முதலிய பைக் டாக்ஸி சேவைக்கு தடை.. அதிரடி உத்தரவிற்கு என்ன காரணம்?

Ola, Uber, Rapido முதலிய பைக் டாக்ஸி சேவைக்கு தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியது கர்நாடகா அரசு.

PT WEB

கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பைக் டாக்ஸி சேவைகளுக்கு போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி தடை விதித்துள்ளார்.

பைக் டாக்ஸி சேவைக்கு தடை..

ரேபிடோ, உபர் போன்ற நிறுவனங்களின் பைக் டாக்ஸி சேவைகளை நிறுத்த போக்குவரத்து துறை செயலாளர் மற்றும்
ஆணையருக்கு கர்நாடக போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. 

2022-ல் பைக் டாக்ஸி சேவைகளை பதிவு செய்ய தாக்கல் செய்த மனுக்களை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி உபர், ஓலா உள்ளிட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடின. 

Rapido Bike Taxi

இந்த வழக்கில் மோட்டார் வாகன சட்டம் 1988இன் படி, விதிகள் வகுக்கப்படும் வரை பைக் டாக்ஸிகள் இயங்கக் கூடாது என
நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், 4 வாரங்களுக்குப் பின் போக்குவரத்து துறை உத்தரவை செயல்படுத்தியுள்ளது.

செயலி அடிப்படையிலான பைக் டாக்ஸி சேவைகளுக்கு ஒழுங்குமுறை விதிகள் இல்லாததால் பயணிகளின் பாதுகாப்பு
கேள்விக்குறியாகியிருப்பதாக அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார். ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களின் நீண்ட நாள்
போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக இது கருதப்படுகிறது.