பீகாரில் குழந்தைகளை துப்பாக்கி முனையில் வைத்து பாடம் நடத்தியது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் மிதான்புரா பகுதியில் குழந்தைகளை துப்பாக்கி முனையில் வைத்து பாடம் நடத்தியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், குழந்தைகளை துப்பாக்கி முனையில் வைத்து ஒருவர் பாடம் நடத்தினார். மேலும் அதனை வீடியோவாகவும் பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் வெளியிட்டார்.
இது குறித்து பீகார் மாநில துணை காவல்துறை கண்காணிப்பாளர் கூறும் போது, “ இது தொடர்பாக விரிவாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவிய அந்த வீடியோ தற்போது எங்களிடம் இல்லை. விசாரணை முடிந்த பின்னர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.