பீகார் மாநிலத்தில் கேபினட் அமைச்சர் தமது உரையில், குடியரசு தின தேதியை மாற்றி குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் கிஷன்கன்ஜில் நடைபெற்ற குடியரசு தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கேபினட் அமைச்சர் அப்துல் ஜலீல் மஸ்தான் பங்கேற்றார். ராணுவ மரியாதைக்குப் பின்னர் அவர் குடியரசு தின உரையாற்றினார். அப்போது அவர் 26 ஜனவரி, 1950ம் ஆண்டு குடியரசு தினம் உருவாக போராடியவர்கள் என்று கூறிப்பிடுவதற்கு பதிலாக 28 ஜனவரி என குறிப்பிட்டார்.