இந்தியா

ஒற்றை ஆளாக 10 ஆயிரம் மரங்களை நட்டு குறுங்காட்டை உருவாக்கிய பீகார் மனிதர்..!

Veeramani

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தை சேர்ந்த சத்யேந்திர கவுதம் மஞ்சி, பால்கு ஆற்றின் தீவுப்பகுதியில் 10 ஆயிரம் மரங்களை நட்டு ஒரு குறுங்காட்டினை உருவாக்கியிருக்கிறார்.

பீகார் மாநிலம், கயா மாவட்டத்தின் பெலகஞ்ச் பகுதியில் உள்ள இமலியாச்சக் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த சத்யேந்திர வுதம் மஞ்சி, பால்கு ஆற்றிலுள்ள ஒரு தீவின் தரிசு நிலங்களில் பெரிய பழத்தோட்டத்தை சொந்தமாக நட்டு உருவாக்கியுள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன்பு 'மலை மனிதன்' தஷ்ரத் மஞ்சியால் ஈர்க்கப்பட்ட இவர், அப்போதிலிருந்து 10,000 மரங்கள், பெரும்பாலும் கொய்யாவைக் கொண்ட பழத்தோட்டத்தினை உருவாக்கும் வேலைகளைத் தொடங்கியதாக கூறினார்.

மலை வழியாக ற்றையடிப் பாதையை தனது கைகளாலேயே உருவாக்கிய தஷ்ரத் மஞ்சி ஒரு நாள் தனது வீட்டிற்கு வந்ததை நினைவு கூர்ந்த கவுதம் மஞ்சி. "தஷ்ரத் மன்ஜி இந்த பகுதியில் ஒரு பழத்தோட்டத்தை நடவு செய்யச் சொன்னார். அந்த நேரத்தில் இந்த இடம் தரிசாகவும், வெறிச்சோடியும் இருந்தது. அப்போது எல்லா இடங்களிலும் மணல் மட்டுமே இருந்தது. ஆரம்பத்தில் இது மிகவும் சிரமமாக இருந்தது. வீட்டிலிருந்து ஒரு தொட்டியில் தண்ணீர் கொண்டு ந்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினேன்"என்று அவர் கூறினார்.

 மேலும்"ஆரம்பத்தில் விலங்குகள் தாவரங்களை அழித்த, நான் காட்டில் இருந்து முள் புதர்களைக் கொண்டு வந்து வேலிகள் உருவாக்கினேன். அந்த வேலிகள் இன்னும் என் பழத்தோட்டத்தை பாதுகாக்கிறது. பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு நான் செய்த பங்களிப்பு பற்றி அறிந்து, என்னை குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் உறுப்பினராக்கினார்" என்று தெரிவித்தார்.

சதேந்திர வுதம் மஞ்சி மகத் பல்கலைக்கழகத்தில் எம்.. பட்டம் முடித்திருக்கிறார். சிறுவர் பாதுகாப்பு ஆணையத்தின் முன்னாள் உறுப்பினராக இருந்த இவர், தற்போது மகத் பல்கலைக்கழகத்தில் செனட்டில் உறுப்பினராக இருந்தபடியே தனது பழத்தோட்டத்தை தொடர்ந்து கவனித்து வருகிறார். இவர் நடவு செய்த கொய்யாக்களில் பெரும்பாலானவை அலகாபாத் கொய்யா வகையைச் சேர்ந்தவை, அவை உயர் தரமானதாகக் கருதப்படுகின்றன. தற்போது கொய்யாவை விற்பனை செய்வதன் மூலம் லாபம் ஈட்டத் தொடங்கியுள்ளதாக  கூறும் அவர் "இந்த நாட்டு மரங்களை மக்கள் நடவு செய்யத் தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்தார்