பீகார் பள்ளி மாணவிகள்
பீகார் பள்ளி மாணவிகள் ani
இந்தியா

பீகார்: பள்ளியில் அடிப்படை வசதி இல்லையெனக் கூறி அதிகாரிகளின் வாகனத்தை அடித்து உடைத்த மாணவிகள்!

Prakash J

பீகார் மாநிலத்தின் பாட்னாவை அடுத்த வைஷாலி மாவட்டத்தில் உள்ள மக்னார் அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து மாணவிகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த கல்வித்துறை அதிகாரிகளின் வாகனத்தை பள்ளி மாணவிகள் அடித்து நொறுக்கிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போராட்டத்தில் ஈடுபட்டபோது, பெண் காவல் துறை அதிகாரி ஒருவர் மாணவிகளை அறைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஆத்திரத்தில்தான், கல்வித்துறை அதிகாரியின் வாகனத்தை அடித்து நொறுக்கியதாக பள்ளி மாணவிகள் தெரிவித்துள்ளனர். பலமுறை கோரிக்கை விடுத்தும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று மாணவிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து மக்னார் துணைப் பிரிவு அதிகாரி நீரஜ் குமார், 'பள்ளி வகுப்பறைகளின் கட்டட அளவைவிட மாணவர் சேர்க்கை அதிகமாக உள்ளது. உட்கார இடம்கிடைக்காத மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.