பீகார் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் மழை வெள்ளம் காரணமாக இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த வெள்ளத்தால் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பீகார் மாநில பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர் பிரத்யயா அளித்தப்பேட்டியில் " பீகாரில் வெள்ளத்தினால் தர்பங்கா மாவட்டத்தில் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. கந்தக் நதி மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டதால், பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. பலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், மக்களுக்கு உதவும் வகையில் 21 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
இதேபோல அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்த தகவலின்படி அம்மாநிலத்தில் 17 மாவட்டங்களில் 6,80,931 பேர் அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதித்துள்ளனர். 62 நிவாரண முகாம்களில் 4,852 பேர் தங்கியுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. இதேபோல வெள்ள நிறுவனம் காரணமாக குறைந்தது 8,91,897 பல்வேறு செல்லப்பிராணிகளும் 8,01,233 கோழிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.