இந்தியா

டீ குடித்து பீகாரில் 4 பேர் பலி

டீ குடித்து பீகாரில் 4 பேர் பலி

webteam

பீகாரில் 10 வயது சிறுமி கவனக்குறைவாக பூச்சிக்கொல்லி மருந்து கலந்த டீத்தூளில் தயாரித்த டீயை குடித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து துணை காவல்கண்காணிப்பாளர் தில்நவாஸ் அஹ்மத் கூறிம்போது, பீகார் மாநிலம் தார்ப் நகர் பகுதியில் பஹதூர்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தில், 10 வயது சிறுமி தனது குடும்பத்திற்காக டீ தயாரித்துள்ளார். அப்போது, தவறுதலாக பூச்சி மருந்து கலந்த டீத்தூளை பயன்படுத்தியுள்ளார். பூச்சி மருந்து கலந்த டீயை குடித்த 5 பேரில் சிறுமி உட்பட 3 பேர் வீட்டிலேயே உயிரிழந்தனர்.மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். தர்பங்கா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்று கூறினார்.