நிதீஷ்குமார்
நிதீஷ்குமார் ட்விட்டர்
இந்தியா

பீகார்: இடஒதுக்கீட்டை 65% ஆக உயர்த்த திட்டம்.. முதல்வர் நிதிஷ் அதிரடி அறிவிப்பு!

Prakash J

இடஒதுக்கீடு தொடர்பாக, சமீபகாலமாக பல்வேறு மாநிலங்கள் பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றன. மணிப்பூரில் குக்கி - மெய்தி இனமக்களிடையே நிலவும் இடஒதுக்கீட்டுப் பிரச்னையால், இன்றுவரை அம்மாநிலம் வன்முறைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வின் முழு விவரங்களை சட்டப்பேரவையில் முதல்வர் நிதீஷ்குமார் வெளியிட்டார். இதையடுத்து, இடஒதுக்கீட்டு வரம்பை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளார். தாழ்த்தப்பட்டோருக்கு 20%, பழங்குடியினருக்கு 2%, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் , பிற்படுத்தப்பட்டோருக்கு 43% ஆக உயர்த்த பரிந்துரை செய்துள்ளார். இதை, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

இதையும் படிக்க: 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள்... 2 முறை சாதனை படைத்த அமெரிக்க வீரர்! யார் இந்த ஜாஸ்கரன் மல்கோத்ரா?

மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு (சமீபத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக பீகாரில்தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டன) விவரங்களை மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்து, அதன் மீது நடத்தப்பட்ட விவாதம் குறித்துப் பேசிய நிதீஷ்குமார், ”பீகார் மாநிலம் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது. எனவே, பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் மட்டுமே எங்கள் மாநிலம் முன்னேற முடியும்.

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திவிட்டோம். அதுபோல நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும். நாட்டில் இதுவரை சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில் சில சாதியினர் அதிகரித்துவிட்டதாகவும், சில சாதியினர் குறைந்துவிட்டதாகவும் நீங்கள் எப்படி கூறமுடியும்? இது போலியான பேச்சு ஆகும். எனவே நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: இது நியாயமா! ”ரோகித் சர்மாவிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள் ஷகிப் அல் ஹசன்”- முன்னாள் வீரர் காட்டம்!

முன்னதாக, பீகார் மாநிலம் முசஃபர்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “வாக்குகளை கவர்ந்திழுப்பதே சாதி வாரி கணக்கெடுப்பின் நோக்கம். இதில் யாதவர்கள், இஸ்லாமியர்கள் எண்ணிக்கை அதிகமாக காட்டப்பட்டுள்ளது. கூட்டணியில் உள்ள லாலு பிரசாத் யாதவின் நிர்பந்தத்திற்கு பயந்து நிதிஷ் குமார் இவ்வாறு செய்துள்ளார். எண்ணிக்கையை மிகைப்படுத்தி காட்டுவது மூலம் நேபாளம், வங்கதேச எல்லைகளில் பெரிய பிரச்னை ஏற்படும். இதர பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு நிதீஷ்குமார் அரசு அநீதி இழைத்துள்ளது” எனச் சாடியிருந்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

இதற்கு ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அப்போதே பதிலளித்து இருந்தன. இந்த நிலையில்தான் அமித் ஷாவிற்கு பதிலடி கொடுத்துள்ளார் நிதீஷ்குமார்.

இதையும் படிக்க: 'அன்று நீங்கள் விட்டுக் கொடுத்தீர்களா?'.. மேத்யூஸ் செய்த தவறைச் சுட்டிக்காட்டும் வீடியோ வைரல்!