பிஹார் தேர்தல் ஏன் முக்கியம் web
இந்தியா

பிஹார் தேர்தல்| 2ஆம் கட்ட தேர்தல் பரப்புரை இன்று நிறைவு!

பிஹார் தேர்தல் பரபரப்பாக நடந்துவரும் நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் நிறைவடைகிறது..

PT WEB

பிஹாரில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது. பிஹாரில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

பிஹார் தேர்தலில் பாஜக 101 இடங்களில் போட்டியிடும் பாஜக

முதற்கட்ட தேர்தல் 6ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 11ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 20 மாவட்டங்களின் 122 தொகுதிகளிலும், அரசியல் கட்சிகளின் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது.

பரப்புரைக்கு இன்று கடைசிநாள் என்பதால், பல்வேறு கட்சித் தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் 14ஆம் தேதி நடைபெறுகிறது.