இந்தியா

பீகாரில் பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச் சூடு

பீகாரில் பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச் சூடு

rajakannan

பீகார் மாநிலத்தில் பத்திரிகையாளர் பங்கஜ் மிஸ்ரா மீது இருசக்கார வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு இரு தினங்களே ஆன நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளான பங்கஜ் மிஸ்ரா, பீகாரில் இயங்கி வரும் ராஷ்ட்ரிய சஹாரா செய்தித்தாளில் பணி புரிந்து கொண்டிருக்கிறார். மிஸ்ரா தனது கிராமமான அர்வாலில் உள்ள வங்கி ஒன்றில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்துள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பத்திரிகையாளர் மிஸ்ராவை துப்பாக்கியால் சுட்டனர். இதில் மிஸ்ரா படுகாயம் அடைந்து கீழே சரிந்து விழுந்தார். பின்னர் மர்மநபர்கள் பணத்தை திருடிச் சென்றனர்.

படுகாயம் அடைந்த பத்திரிக்கையாளர் மிஸ்ரா உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.