இந்தியா

கர்நாடகாவில் இன்று முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி

கர்நாடகாவில் இன்று முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி

jagadeesh

கர்நாடகாவில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து, 50 சதவிகித இருக்கைளுடன் இன்று முதல் திரையரங்குகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கர்நாடகாவில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் ஆலோசனைக்  கூட்டம் நடைபெற்றது. அதில், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், பெரிய வணிக வளாகங்களை திறப்பதற்கு அனுமதி அளிப்பதென முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கொரோனா விதிகளை பின்பற்றி 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

அதேபோல், வரும் 26 ஆம் தேதி முதல் உயர் கல்வி நிறுவனங்களை திறக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இரு டோஸ் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.