இந்தியா

புவனேஷ்குமாருடன் டேட்டிங் சென்ற தென்னிந்திய நடிகை யார் தெரியுமா?

புவனேஷ்குமாருடன் டேட்டிங் சென்ற தென்னிந்திய நடிகை யார் தெரியுமா?

Rasus

ஐபிஎல் 2017 சீசனில் விக்கெட் வேட்டையில் அசத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் புவனேஷ்குமார். அதைவிட அசத்தலான விஷயத்தை இன்ஸ்டாகிட்ராமில் பதிவேற்ற ஆவலாய் காத்துக்கிடந்தார்கள் அவரது ரசிகர்கள். விஷயம் என்னவென்றால், உணவு விடுதி ஒன்றில் அமர்ந்தவாறு ஜூஸ் அருந்தும் புகைப்படம் ஒன்றை பதிவேற்றி உள்ள அவர், ‘என்னுடன் டேட்டிங் வந்த நடிகையின் புகைப்படத்தை விரைவில் பதிவிட இருக்கிறேன்’என தெரிவித்து இருந்தார். யார் அந்த நடிகை என தவித்துக் கிடந்த ரசிகர்களை அதிக நேரம் காக்க வைக்காமல் ரகசியத்தை அம்பலப்படுத்தி விட்டது ஒரு ஆங்கில நாளிதழ். புவனேஷ்குமாருடன் டேட்டிங் செல்வதற்கு முன் அந்த நடிகையுடன் காரில் சென்ற புகைப்படத்தை வெளியிட்டு சஸ்பென்ஸை உடைத்து விட்டது அந்த நாளிதழ். ரசிகர்கள் சிலரும் அந்த நடிகையுடன் புவனேஷ்குமார் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு கன்பாஃர்ம் செய்து விட்டனர். அந்த நடிகை தெலுங்கில் நடித்து வரும் அனுஸ்மிரிதி சர்கார். பெங்காலி மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.