இந்தியா

ரூபாய் 420 கோடி வரி ஏய்ப்பு... புஹாரி குழுமத்தில் வருமான வரி சோதனை நிறைவு

webteam

புஹாரி மற்றும் இடிஏ நிறுவனங்களில் நடைபெற்று வந்த வருமானவரித்துறை சோதனை நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புஹாரி குழும நிறுவனங்கள், குடோன்கள், நிர்வாகிகள் வீடுகள் ஆகியவற்றில் கடந்த 4ஆம் தேதி முதல் ஆய்வு நடைபெற்றது. சென்னை, தூத்துக்குடி, ராமநாதபுரம், டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு என பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையில் 750 வருமான வரித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அதில், புஹாரி குழுமம் 420 கோடி ரூபாய் வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரியவந்துள்ளது. நிலக்கரி இறக்குமதி செய்ததில் முறைகேடு நடைபெற்றது தெரியவந்ததை அடுத்து, வெளிநாடுகளில் இருந்த புஹாரி நிறுவன நிர்வாகிகள் சென்னை வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். வங்கி கணக்குகள், லாக்கர்கள், தொழில் சாந்த பண பரிவர்த்தனைகளும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. தேவைப்பட்டால், மீண்டும் புஹாரி குழுமத்தில் சோதனை நடத்தப்படும் என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.